Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாட்டிறைச்சி சமைத்ததாக காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்!

சித்தோர்கர்: மாட்டிறைச்சி சமைத்ததாக காஷ்மீர் மாணவர்கள் மீது ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்சர்க் நகரில் மேவர் பல்கலைக்கழகம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த பல்கலைக்கழகத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 4 மாணவர்கள் தங்கள் விடுதி அறையில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மாட்டு இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக திடீரென வதந்தி பரவியது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் பல்கலைக்கழக விடுதி முன்பு திரண்டனர். அவர்கள் பசுவதையை எதிர்த்து கோஷமிட்டனர். மேலும், மாட்டு இறைச்சி சமைக்க கூடாது என்றும் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள்.

அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் திடீரென அத்துமீறி பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து 4 காஷ்மீர் மாணவர்களையும் தாக்கி உள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த 4 மாணவர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ''நாங்கள் மாட்டு இறைச்சி எதுவும் சமைக்கவில்லை" என்று அந்த 4 மாணவர்களும் மறுத்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவர்கள் சமைத்த உணவை சேகரித்த போலீசார், அதை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி சமைத்தாக கூறி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மாட்டு இறைச்சி சமைத்ததாக .காஷ்மீர் மாணவர்கள் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்த்இல் தாக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ