Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடைபயிற்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்ட கபடி வீரர்! (அதிர்ச்சி வீடியோ)

நடைபயிற்சி சென்று கொண்டிருந்த தேசிய கபடி வீரரை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரியானா மாநிலம், ரோத்தக் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் சுக்வீந்தர் நர்வால், தேசிய அளவிலான போட்டியில் விளையாடி இருந்தார். பயிற்சிக்காக சக வீரர் ஒருவருடன் சென்றுள்ளார். அப்போது, சுக்வீந்தரை மர்ம ஆசாமிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த கொலை சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவை காண...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ