Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் பிரிவினைவாதிகள் சிறுபிள்ளைத்தனமானவர்கள்: கிண்டலடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.!

ஜம்மு: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிறுபிள்ளைத்தனமானவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஜம்மு-காஷ்மீர் மாநில பிரிவு தலைவர் சுசேத் சிங், ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பாகிஸ்தானுடன் இந்தியா நட்பு பாராட்டி வருவதை காஷ்மீர் பிரிவினைவாதிகள் விரும்பவில்லை. அண்டை நாடுகளுடன் நல்லுறவைத் தொடரவே இந்தியா விரும்புகிறது.

தொல்லை கொடுத்துவரும் சிறுபிள்ளைத்தனமானவர்களை (பிரிவினைவாதிகள்) தவிர்த்துவிட்டு, குறிக்கோளை அடைய தொடர்ந்து முன்னேற வேண்டும். பாகிஸ்தான் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது நமக்கு ஆத்திரமூட்டினாலும் அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. நல்ல முறையில் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close