Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாரத் மாதா கீ ஜே சொல்ல மறுத்த எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்: காங்கிரஸ் எதிர்ப்பு!

புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 'பாரத் மாதா கீ ஜே' என்று சொல்ல மறுத்த அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் எம்.எல்.ஏ. வரீஸ் பதான், இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிர மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தின்போது, அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ. வரிஸ் பதானைப் பார்த்து ‘பாரத மாதாவுக்கு ஜே’ என சொல்லும்படி பா.ஜ.க. உறுப்பினர் ராம் காதம் கூறினார். ஆனால் அப்படி வரீஸ் பதான் சொல்ல மறுத்ததால் அவரை சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யும்படி பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இந்த பிரச்னை காரணமாக சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து வரிஸ் பதானை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமைச்சர் ரனித் பாட்டீல் முன்மொழிந்தார். இதற்கு சபை ஒப்புதல் அளித்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே, இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர் சட்டசபைக்கு வர முடியாது.

இந்நிலையில், இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்திதொடர்பாளர் அபிஷேக் சிங்கி, ”ஒவைஸி சகோதரர்கள், அஸாதுதீன் மற்றும் அக்பருதீன், பா.ஜ.க., எம்.எல்.ஏ கிரிராஜ் சிங், சாக்ஸி மகாராஜ் அல்லது சமாஜ்வாடி அஸம் கான், பகுஜன் சமாஜ் கட்சியின் ஷபிக் உர் ரெஹ்மான் ஆகியோர் தொடர்ந்து பிரிவினைவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். பாரத் மாதா கீ ஜே, ஜெய்கிந்த் அல்லது வந்தே மாதம் ஆகிய வசனங்கள் எந்த சட்ட புத்தகத்திலும் இல்லை" என்றார்.

இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஒவைஸி கூறுகையில், ''முழக்கத்தை சொல்ல மறுப்பது கருத்து சுதந்திரம். இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் முழக்கத்தை சொல்லவில்லை என்பதற்காக சஸ்பெண்ட் செய்வது இதுவே முதன்முறை ஆகும். மகாராஷ்டிரா சட்டசபை தவறான முன்னோடியாக மாறியுள்ளது" என்று குற்றஞ்சாட்டினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close