Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்! (வீடியோ)

பாட்னா: பீகார் மாநிலத்தில் சிறை கண்காணிப்பாளர் ஒருவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து அந்த சிறை கண்காணிப்பாளர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்ட சிறையின் கண்காணிப்பாளராக இருப்பவர் க்ரிபா சங்கர் பாண்டே. இவர், சிறுமி ஒருவரின் ஆடையை அவிழ்த்துவிட்டு, உள்ளாடையுடன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது ஜாவித், பாண்டேவின் லீலைகள் அடங்கிய புகைப்படங்களை முதல்வர் நிதிஷ் குமாரிடம் காண்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிதிஷ் குமார், இது தொடர்பான விசாரணை அறிக்கை வரும் முன்பே பாண்டேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருக்கிறார்.


இதையடுத்து, முதல்வரின் உத்தரவுபடி, தற்போது பாண்டே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், போலீசாரும் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுடன், பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ