Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏலம் விடப்பட்ட விஜய் மல்லையா வீட்டை வாங்க ஆளில்லை!

மும்பை: வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் வீடு,  ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஆரம்ப விலை ரூ.150 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத்  தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 -ம் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்று விட்டார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தியாவுக்கு நான் இப்போது திரும்ப வாய்ப்பு இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மும்பை கிங்ஃபிஷர் வீட்டை எஸ்.பி.ஐ. ஆன்லைன் மூலம்  ஏலம் விட்டது. வீட்டின் ஆரம்ப மதிப்பு ரூ. 150 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆனால் ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏலத்திற்கு விண்ணப்பித்துக் கலந்துகொண்டவர்கள் விலை அதிகம் என்று கூறியுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ