Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு ரூபாய் குறையாமல் வசூலிக்கப்படும்: அருண்ஜெட்லி 'கறார்'!

புதுடெல்லி: தேசிய வங்கிகளிடம் கடன்பெற்று நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கும் விஜயமல்லையாவிடமிருந்து ஒரு ரூபாய் கூட குறையாமல் கடன் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், கடந்த 2 -ம் தேதி இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

புதுடெல்லியில் இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிதியமைச்சர் அருண்ஜெட்லி, “நாடுமுழுவதிலிருந்தும் உள்ள 17 வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச்செலுத்தாமல் தப்பிச்சென்றுள்ளார் தொழிலதிபர் விஜயமல்லையா. இவற்றில் பெரும்பாலும் மாநில கட்டுப்பாட்டில் வரும் நிறுவனங்கள்.

அவை இதுகுறித்து ஆய்வு நடத்திவருகின்றன. விஜயமல்லையா கடன் பெற்ற நிறுவனங்கள் கடன்தொகையில் ஒரு ரூபாய் விடாமல் அவரிடமிருந்து வசூலிக்கும். மேலும் அவரின் நடத்தைக்கு அவர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.

இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மும்பை கிங்ஃபிஷர் வீட்டை எஸ்.பி.ஐ. வங்கி, இன்று ஆன்லைன் மூலம்  ஏலம் விட்டது. வீட்டின் ஆரம்ப மதிப்பு ரூ. 150 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீட்டை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ