Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜே.என்.யூ. போராட்டம்: தவிர்க்க முடியாத 4 பெண்களின் குரல்!

ஜே.என்.யூ - மாணவர் சங்கம் - கன்ஹையா குமார் கைது - மத்திய அரசு - போராட்டம். இந்த வார்தைகளிலேயே அங்கு நடக்கும் ஒட்டுமொத்த பிரச்னையையும் நாம் முடித்துவிடுகிறோம்.

கன்ஹையா குமார் என்ற ஆளுமையை முன்னிறுத்தியே அந்த செய்தியை , பிரச்னையை காண்கிறோம். கன்ஹையா குமார் பற்றியோ, அந்த போராட்டங்கள் பற்றியோ தேவையான அளவு நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அதனைத் தாண்டி ஒலிக்கும் சில குரல்களை நாம் கேட்கத் தவறிவிட்டோம்.

அப்படியான சில பெண்களின் குரல்கள் இங்கே....



ஷெஹ்லா ரஷித் ஷோரா

இன்று ஜே.என்.யூ வில் கன்ஹையா குமாரின் குரலை மிஞ்சி ஒலித்துக்கொண்டிருக்கும் பெண் குரல். மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர். தேசத்துக்கு எதிராகவும், காஷ்மீரின் விடுதலை தொடர்பான குரல்களும்தான் கன்ஹையா குமாரின் கைதுக்கு காரணமாகும். அவர் மீதான இந்த குற்றச்சாட்டின் போலித்தனத்தையும் மத்திய அரசு மற்றும் ஜே.என்.யூ சேர்ந்து ஈடுபடும் வஞ்சக செயல்களையும் அப்பட்டமாக வெளிக்கொண்டு வந்துள்ளார் ஷோரா. கலகத்துக்கு காரணமான காஷ்மீரிலிருந்து வந்தவர்தான் ஷோரா. அவ்வளவு வேகமாக பேசுகிறார். மாணவர்களிடம் அப்படி ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்துகிறார். அதுவும் கன்ஹையா குமார் கைதானபோது ,"நாட்டின் உயர்கல்வியைக் கைப்பற்றக் காத்துக்கொண்டிருக்கும் தாராளமயக் கொள்கைகளையும், மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பா.ஜ.க. அரசையும் விமர்சித்தால், மாணவர் உரிமைகளை வலியுறுத்தினால், தேச விரோதம் என்று பிடித்துச் சிறையில் தள்ளுகிறது அரசு" , என்று பொரிந்து தள்ளினார்.

குரல் கேட்க:
https://youtu.be/1eV-aa0eYRo


ஆயிஷா கித்வாய்
-

ஜே.என்.யூ நிர்வாகமே மத்திய அரசுக்கு கைப்பாவையாக செயல்படும் நிலையில் , அந்த பல்கலைக்கழகத்திலுள்ள ஆசிரியர் சங்கத்தின் முகமாக விளங்கினார் ஆயிஷா. இந்தியக் கல்லூரிகளில் பாலின சமத்துவத்தின் நிலையை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட "சாக்‌ஷ்ம் குழு"வின் உறுப்பினரும் , ஜே.என்.யூ மொழியியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியருமான இவர், மத்திய அரசின் இந்த கொடும் செயலையும் , பல்கலைக்கழகத்தின் சார்புமையையும் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

குரல் கேட்க:
https://youtu.be/n1wFnYmfQF
c

நிவேதிதா மேனன்

இவர் ஜே.என்.யு-வின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர். பாலின சமத்துவத்தை குறித்த ஆராய்ச்சி கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார். " ஒரு நாடு என்பது மக்களை வேட்டையாடுவது அல்ல. மக்களின் கருத்துக்களை புரிந்துகொள்வதே ஒரு நாடாக மதிக்கப்படும் " என்று ஒரு அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து இவர் கூறும் இந்த கருத்தே இவரின் ஆளுமையை வெளிப்படுத்தும்.

குரல் கேட்க:
 https://youtu.be/Dg_2b7DaJ6Q


கவிதா கிருஷ்ணன்

ஜே.என்.யு வின் முன்னாள் மாணவர். அதுமட்டுமின்றி  மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைச் செயலாளர். மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர். "மகள்களுடன் செல்ஃபி" என்ற திட்டத்திற்காக பிரதமரை விமர்சித்தபோதும் , நிர்பயா பாலியில் வன்முறைக்கு எதிராக குரல்கொடுத்தபோதும் கவனிக்கப்பட்ட இவர் , தற்போது கன்ஹையாவிற்காக குரல் கொடுத்துவருகிறார். 

குரல் கேட்க:
https://youtu.be/-TW2TNeLaMg


தொகுப்பு:
பா.நரேஷ் (மாணவ பத்திரிகையாளர் )

எடிட்டர் சாய்ஸ்

MUST READ