Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி ஒரு நல்ல மந்திரவாதியாம்: கிண்டலடிக்கும் அஸ்ஸாம் முதல்வர்!

ஜோர்கட்: பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல மந்திரவாதி என்று அஸ்ஸாம் முதல்வர் கிண்டலாக தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு முதல்வர் தருண் கோகாய் தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''அஸ்ஸாம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். எந்த கட்சியின் உதவியும் இல்லாமல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம். மோடி, கொல்கத்தாவை சேர்ந்த பிரபல மாயவித்தைகாரரைவிட சிறந்தவர்.

அவருக்கு அற்புதமான, மிகவும் சிறந்த மந்திர சக்தி உள்ளது. அவர், தன்னுடைய கட்சி வேட்பாளர்களுக்கான ஒரு சிறந்த விற்பனைக்காரர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்கிறார். சாதாரண மக்களுடன் தொடர்பு இல்லாத மிகப்பெரிய மனிதர் மோடி. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா போன்ற பெரிய நாடுகளுடன் தான் அவருக்கு உறவு" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close