Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஏ’ ரக ரயில் நிலையங்களில் கும்பகோணம் ரயில் நிலையம்!

புதுடெல்லி: சுத்தமான ரயில் நிலையங்கள் வரிசையில், ‘ஏ’ ரக ரயில் நிலையங்களில் கும்பகோணம் ரயில் நிலையம் இடம் பிடித்துள்ளது.

ரயில் நிலையங்களை சுத்தமாக பராமரிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வின் முதல்கட்ட அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டு உள்ளார். 40 பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு பயணிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்களுடைய பதில்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.

ஆய்வு தொடர்பான இறுதி அறிக்கையானது ரயில்வேயிடம் விரைவில் அளிக்கப்பட உள்ளது. அந்த அறிக்கையில் தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், ரயில்வே ஊழியர்களின் பதில் மற்றும் பிற சேவை வழங்குபவர்களின் பதில்கள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த ஆய்வில், ‘ஏ–1’ ரக ரயில் நிலையங்களில் (மொத்தம் 75) மிக சுத்தமான ரயில் நிலையங்கள் வரிசையில் சூரத், ராஜ்கோட் (குஜராத்), பிலாஸ்பூர் (சத்தீஸ்கார்), சோலாப்பூர், மும்பை சென்ட்ரல் (மராட்டியம்), சண்டிகர், புவனேஸ்வர் (ஒடிசா), வதோதரா (குஜராத்) ஆகியவை இடம் பிடித்துள்ளன.

‘ஏ’ ரக ரயில் நிலையங்களில் (332) பியாஸ் (பஞ்சாப்), ஜாம்நகர், காந்திதாம் (குஜராத்), வாஸ்கோடா காமா (கோவா), கும்பகோணம் (தமிழ்நாடு), நாசிக் ரோடு (மராட்டியம்) ஆகியவை இடம் பிடித்துள்ளன.

மொகல்சராய் (உத்தரபிரதேசம்), புனே (மராட்டியம்) ஆகியவை இந்தியாவிலேயே மிக அசுத்தமான ரயில் நிலையங்களாக இடம் பிடித்துள்ளன. மேலும், இறுதி அறிக்கை வழங்கப்பட்ட பின், ரயில்வே நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ