Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்எல்ஏவால் கால் உடைக்கப்பட்ட குதிரைக்கு செயற்கை கால் பொருத்தம்! (உருக வைக்கும் வீடியோ)

பாஜக எம்எல்ஏ கொடூரமாக தாக்கியதில் காலை இழந்த குதிரைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குதிரையின் காலை உடைத்த எம்.எல்.ஏ.வை காவல்துறையினர் கைது செய்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில அரசை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் டேராடூனில் கடந்த 14ம் தேதி நடந்த போராட்டத்தின் போது பாதுகாப்புக்கு வந்த குதிரை போலீஸ்படையை சேர்ந்த ‘சக்திமான்’ என்ற குதிரையின் முன்னங்காலில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி தடியால் அடித்ததோடு, மற்ற ஒரு பாஜக பிரமுகர் ஒருவர் கடிவாளத்தை இழுத்து குதிரையை கீழே தள்ளினார். இதில் குதிரை கீழே விழுந்து காலில் எலும்பு முறிந்தது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. கணேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து குதிரையை கீழே தள்ளிய பிரமோத் போராவை காவல்துறையினர் கைது செய்தனர்.



இதனிடையே, காயமடைந்த குதிரைக்கு ராணுவ டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். குதிரை வலியால் துடித்து வருவதாகவும், நிற்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குதிரை சத்திமான் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.

இருப்பினும் அறுவை சிகிச்சையை அடுத்து குதிரையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. புகைப்படங்கள் அனைவரையும் கண்கலங்க செய்து உள்ளது. பாஜனதா எம்.எல்.ஏ.வை வசைப்பாடிய சமூக வலைதள பயனாளர்கள், பாரதீய ஜனதா தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் குதிரையின் காலை உடைத்த பாஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷியை டேராடூனில் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close