Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமிதாப்பச்சனுக்கு ஜனாதிபதி பதவி வழங்க வேண்டும்: சத்ருகன் சின்கா

பாட்னா: நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஜனாதிபதி பதவி வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாட்டுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நடிகர் சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.

மும்பை திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்தவர்கள் அமிதாப்பச்சன் மற்றும் சத்ருகன் சின்கா. இவர்கள் இருவரும் இணைந்து 'காலாபதர்', 'தோய்தானா', 'ஷான்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இணைந்து நடிக்கவில்லை.

மேலும், தனது மகன் அபிஷேக் பச்சனின் திருமணத்துக்கு சத்ருகன் சின்காவை அமிதாப்பச்சன் அழைக்கவில்லை. இதன் பின்னர் சத்ருகன் சின்காவுக்கு அமிதாப்பச்சன் இனிப்பு அனுப்பினார். ஆனால், அதை சத்ருகன் சின்கா திருப்பி அனுப்பி விட்டார். இதனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.

இந்நிலையில், அமிதாப்பச்சனுக்கு ஜனாதிபதி பதவி வழங்க வேண்டும் என சத்ருகன் சின்கா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நடிகர் அமிதாப்பச்சன் கலாச்சாரத்திலும், சமூக ரீதியிலும் பல சாதனைகள் புரிந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

அதேநேரத்தில், அவருக்கு ஜனாதிபதி பதவி வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் நமது நாட்டுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அவர் ஜனாதிபதியானால் அவருக்கும் பெருமை கிடைக்கும். எனவே, பிரணாப் முகர்ஜிக்கு பிறகு அமிதாப்பச்சனை ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்தால் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close