Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசை காட்டி மோசம் செய்த அரசு... செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு முதல் செக்!

பொது வருங்கால வைப்பு நிதியான பிபிஎஃப், செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வழங்கப்படும் வட்டி குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த வட்டியையெல்லாம் தற்போது குறைத்து அறிவித்திருக்கிறது. நாட்டின் பெரும்பாலான நடுத்தர மக்களின் இரண்டாவது வருவாயாக இருந்து வருபவை, தபால் நிலையம் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பட்டு வந்த அரசு சிறு சேமிப்பு திட்டங்கள்தான். இந்த சேமிப்பு திட்டங்களில் இருந்து கணிசமான வருவாய், வட்டி மூலம் கிடைத்து வந்தது.
 

ஆனால் கடந்த சில மாதங்களாகவே,  இந்தச் சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைக்க அரசு முயற்சி செய்து வந்தது. தற்போது சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைத்தும் விட்டது. இதனால் பெரும்பாலான சிறு சேமிப்பாளர்களும், முதலீட்டாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது வருங்கால வைப்பு நிதியான பிபிஎஃப், செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வழங்கப்படும் வட்டியும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்ப‌டி, பிபிஎஃப் வட்டி விகிதம் இப்போதுள்ள 8.7 சதவிகி‌த்தில் இருந்து 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 8.7 சதவிகிதத்தில் இருந்து 7.8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்புப் பத்திரமான என்எஸ்சி-யின் வட்டியும் 8.5 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாகவும், செல்வமகள் சேமிப்புக்கு வட்டி 9.2 சதவிகிதத்தில் இருந்து 8.6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு தொடர்ந்து 4 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close