Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து திரும்பிய 77% மாணவர்கள் தகுதி தேர்வில் தோல்வி: பகீர் தகவல்!

புதுடெல்லி: வெளிநாடுகளில் மருத்துவம் படித்து திரும்பிய 77 சதவிகித மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ள பகீர் தகவலை தேசிய கல்வி வாரியம் அளித்து உள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து திரும்பி வரும் மாணவர்கள், இந்தியாவில் டாக்டர்களாக பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதுபற்றி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, தேசிய கல்வி வாரியம் அளித்துள்ள பதிலில், ''கடந்த 2004-ம் ஆண்டு 4 சதவீத மாணவர்களே இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர்.

அதிகபட்சமாக கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் 2,851 மாணவர்களில் 2,192 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இது 76.8 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் முறையே 10.4 சதவீதமும், 11.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஜூன் மாதம் 5,967 மாணவர்கள் பங்கேற்ற தேர்வில் 282 மாணவர்களே வெற்றி பெற்றனர். இது 4 சதவீதமே ஆகும்.

கடந்த 12 ஆண்டுகளில் வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்தியா திரும்பியவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தகுதி தேர்வுகளில் 77 சதவீத மாணவர்கள் தோல்வியே அடைந்து உள்ளனர்" என்ற பகீர் தகவலை தெரிவித்து உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close