Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஏழைகளின் இறைத்தூதர் மோடி!' - ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளை எரிச்சல்படுத்திய மத்திய அமைச்சர்!

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பிரபலமான தலைவர்களில் ஒருவரான பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகளின் இறைத்தூதராக விளங்குவதாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்தார். மோடி இந்தியாவுக்கு கடவுள் தந்த பரிசு என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று கட்சியின் அரசியல் தீர்மானத்தை கொண்டு வந்த மத்திய மந்திரி வெங்கையா நாயுடு,  கொஞ்சநேரம் மோடியின் புகழ்பாடினார். இந்த புகழ்ச்சி மோடியே நெளியும் வகையில் இருந்தது.

“ இந்தியாவை வலுவான, வளமான நாடாக மாற்றுவதற்காக மோடி உழைத்து வருகிறார். உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் மோடி  30-வது இடத்தை பெற்றுள்ளார். அவர் இந்தியாவுக்காக கடவுள் தந்த பரிசு. ஏழைகளின் இறைத்தூதராக மோடி விளங்குகிறார். ஒவ்வொரு துறையிலும் அவர் சவால்களை சந்தித்து வருகிறார். ஆனால், அனைத்தையும் வெற்றிகரமாக கையாண்டு வருகிறார். மோடியின் புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. ” என்றார்.

வெங்கையா நாயுடுவின் இந்த பேச்சு  பாஜகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பலருக்கு எரிச்சலை தந்தது. 

செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள்,  வெங்கையா நாயுடுவின் பேச்சு குறித்து அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

ஆனால், இக்கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ராஜ்நாத்சிங், செய்தியாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 'வெங்கையாநாயுடுவின் பேச்சை நான் கேட்கவில்லை' என்று கூறி மழுப்பிவிட்டு அரங்கத்தை விட்டு வெளியேறினார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close