Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வயல்வெளியில் வாலிபரை பந்தாடிய யானை! (பதை பதைக்க வைக்கும் வீடியோ)

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் வயல் வெளியில் புகுந்த யானை ஒன்று அங்கிருந்த வாலிபரை தூக்கி பந்தாடியது.

 

மேற்குவங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில், நாஷிக்கிராம் என்ற கிராமத்தில், காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

இந்நிலையில், நேற்று கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை கிராம மக்கள் விரட்ட முற்பட்டனர். அப்போது ஒரு யானை வயலில் நின்ற விவசாயி ஒருவரை ஒன்று தூக்கி வீசியது. இந்தக் காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நாஷிக்கிராமம் பகுதியில், கடந்த சில நாட்களாக விளைநிலங்களுக்குள் உலா வரும் காட்டுயானைகள் தாக்கியதில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்.

இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் காட்டுயானைகளை வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ