Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு!

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என கேரள தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அதற்கான பணிகளை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஹரி கிஷோர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், ''பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், 'ஓட்டு போடு, வெற்றி பெறு' என்ற பெயரில் ஓட்டுப் போடும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாழ்த்து அட்டை ஒன்று, தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்படும்.

அந்த அட்டையில் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்தல் முடிந்த பின்பு அந்த அட்டையின் அடிப்பகுதி அனைத்தும் சேகரிக்கப்பட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், பல்வேறு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்'' எனக் கூறியுள்ளார்.

ஓட்டு போட்டால் பரிசு வழங்கப்படுவது நாட்டிலேயே இதுவே முதன்முறையாகும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close