Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருத்து கணிப்புகள் பணம் கொடுத்து வெளியிடுபவை: ஆஸம் கான்

சம்பால்: கருத்துக் கணிப்புகள் பணம் கொடுத்து வெளியிடப்படுபவை என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கான் தெரிவித்து உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு தற்போது தேர்தல் நடைபெற்றால், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், ஆளும் சமாஜவாதி கட்சி வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் ஒரு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான ஆஸம் கான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கருத்துக் கணிப்புகள் பணம் கொடுத்து வெளியிடப்படுபவை. யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குச் சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும்

தற்போதைய அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் ஓராண்டு உள்ளது. அடுத்து வரும் தேர்தலிலும் சமாஜவாதி கட்சியே வெற்றி பெறும் என்பதால், மீண்டும் 5 ஆண்டுகளுக்கு எங்களது ஆட்சியே தொடரும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close