Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொய் பணத்தை விவசாயிகளுக்கு வழங்கிய புதுமண தம்பதி: நெகிழ்ச்சி சம்பவம்!

மும்பை: தங்களது திருமணத்தில் கிடைக்கப் பெற்ற ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய் பணத்தை வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஒரு புதுமண தம்பதி.

தானேயை சேர்ந்த தேவேந்திரா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரோஷினிக்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது, தேவேந்திரா மற்றும் ரோஷினியை மிகவும் கவலை அடைய செய்தது. அதனால், இருவரும் சேர்ந்து வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என திருமணத்திற்கு முன்பே ஆலோசித்து வந்திருக்கின்றனர்.

அப்போது, தங்களது திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் தரும் மொய்ப்பணத்தை, வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணமாக தர இருவரும் முடிவு செய்தனர். மேலும், தங்களது இந்த முடிவை அவர்கள் பெற்றோரிடம்  கூறி இருக்கின்றனர். தேவேந்திரா மற்றும் ரோஷினியின் இந்த நல்ல முடிவை, அவர்களின் பெற்றோரும் பூரித்துப்போய் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், நவிமும்பையில் உள்ள சான்பாடாவில் நேற்று முன்தினம் தேவேந்திரா மற்றும் ரோஷினியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமண விழாவிற்கு வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் புதுமணத் தம்பதியின் இந்த நல்ல செயலை ஊக்குவிக்கும் வகையில் மொய்ப்பணத்தை சற்று அதிகமாகவே அளித்தனர். மணப்பெண்ணின் தந்தை மட்டும் விவசாயிகள் நிவாரண நிதிக்கு தனிநபராக ரூ.1 லட்சம் அளித்தார்.

மேலும், திருமண விழாவில் கலந்துகொண்ட வாஷி ஏ.பி.எம்.சி. வியாபாரிகள் 45 பேர் கூட்டாக சேர்ந்து ரூ.9 லட்சம் கொடுத்தனர். இத்துடன் மணப்பெண், மணமகன் வீட்டார், நண்பர்கள் வழங்கியது என எல்லாவற்றையும் சேர்த்து ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் வரை கிடைத்தது. இந்த தொகையை புதுமணத் தம்பதி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கினர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close