Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரள சட்டமன்றத்திற்கு ஸ்ரீசாந்த் போட்டி?

திருவனந்தபுரம்: கிரிக்கெட்டில்  தடை விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், பாரதிய ஜனதா சார்பில்  கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என செய்தி வெளியாகியுள்ளது.

கேரள சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.  நாளை திருவனந்தபுரம் வரும் பாஜக தலைவர் அமித் ஷாவை அவர் சந்திக்க நேரம் கேட்டிருப்பதன் மூலம்  ஸ்ரீசாந்த் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாளை திருவனந்தபுரம் வரும் அமித்ஷாவை அவர் சந்தித்து பேசுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பின் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தால் கேரளாவின் எர்ணாகுளம் அல்லது திருப்புனித்துரா சட்டமன்றத் தொகுதியில் ஸ்ரீசாந்தை களமிறக்க பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close