Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2016 பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவாவில் நடைபெறும்: சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு!

புதுடெல்லி: இந்த ஆண்டின் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாடு கோவாவில் நடைபெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாடு,  இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருந்தது. அதன்படி, இந்த மாநாட்டிற்கான லோகோவை (இலச்சினை) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று (22-ம் தேதி) வெளியிட்டார்.

இந்த லோகாவில் இந்தியாவின் தேசிய மலரான தாமரையில் பிரிக்ஸ் நாடுகளின் கொடிகள் இடம் பெற்றுள்ளது.

அதன் பின்னவர் அவர் கூறுகையில், ''அக்டோபர் மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒருமித்த, ஒருங்கிணைந்த, கூட்டு தீர்வுகள் தொடர்பான புதிய செயல்திட்டம் வடிவமைக்கப்படும். இதற்காக பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த 50 அரசுத்துறை அதிகாரிகளிடையே கலந்தாலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை கொண்டாடும் வகையில் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி, திரைப்பட திருவிழா, பிரிக்ஸ் ஆரோக்கிய அமைப்பு, பிரிக்ஸ் இளைஞர்கள் அமைப்பு, பொருட்காட்சி, பிரிக்ஸ் நட்புறவி கருத்தரங்கம் போன்றவையும் முக்கிய பெருநகரங்களில் நடத்தப்படும்'' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ