Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் கல்லூரிகள் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: ஸ்ம்ரிதி இரானி

பெங்களூரு: தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி தெரிவித்து உள்ளார்.

தேசிய கல்வி வளர்ச்சிக் குழு சார்பில் பெங்களூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி பேசும்போது, ''இந்தியாவில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு நகரங்களில் வாழும் மக்களை போல், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் தரமான கல்வி சென்று சேர வேண்டும்.

கிராம மக்களுக்கும் தொழிற்கல்விகள் சென்று அடைய வேண்டும். அப்போது தான் உலகளவில் இந்தியாவின் கல்வித்தரம் உயரும். கிராமப்புற மாணவர்களுக்கும் தொழிற்கல்விகள் சென்றடைய தனியார் பல்கலைக்கழகங்கள் முயற்சிக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை தேடிவந்து வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இதனால் நம்நாட்டு மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் சேர்ந்து பழகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள ‘மேக் இன் இந்தியா‘ திட்டத்தின் கீழ் உயர்கல்வியை உலக தரத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அடிப்படை கல்வியின் தரத்தை உயர்த்துவது அவசியமானதாக இருக்கிறது.

தேசிய அளவில் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய அளவில் கல்வித் துறையில் மாற்றங்களை அமல்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலோசனைகளை மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பியுள்ளனர். அதையெல்லாம் ஆராய்ந்து, உரிய ஆலோசனைகள் ஏற்கப்பட்டு, அதன் மூலம் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தொழில் கல்விக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் கட்டணங்கள் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக மருத்துவப் படிப்புக்கு அதிக அளவில் கட்டணம் உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கல்வியை ஒரு சேவையாகக் கருத வேண்டும். பொறியியல் கல்லூரிகள் ஆண்டுக்கு ஒருமுறை பெறும் அனுமதியை இனி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என நீட்டிக்கப்படும்.

இந்தச் சலுகையை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல் கல்லூரி நடத்தி வரும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close