Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்!'

புதுடெல்லி: பொதுஇடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதியுங்கள் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

பிரதமர் மோடியின் சுகாதார திட்டத்தை வெற்றி பெற செய்ய, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள், சிறுநீர் கழிப்பவர்களக்கு அபராதம் விதிக்கும்படி மாநில அரசுகளை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், ''உங்கள் மாநிலத்தின் முக்கிய நகரில் ஏதாவது ஒரு வார்டில் குப்பை கொட்டுபவர்கள், சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபராதம் விதியுங்கள். ஏப்ரல் 30-ம் தேதிக்குள் இதை அமல்படுத்துங்கள்.

மேலும், '2018-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அபராதம் விதிக்கும் நடை முறையை 10 முதல் 15 நகரங்களில் அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்துங்கள். பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதியுங்கள்.

இந்த அபராத திட்டத்தை அமல்படுத்தும் முன்பு, நகர்ப்பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கழிவறை வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும். அதுபோல குப்பை கொட்டுவதற்கான இடங்களையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் தற்போது பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள், சிறுநீர் கழிப்பவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் சட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் நடைமுறையில் உள்ளது. அதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ