Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சித்தராமையாவின் ஊழல் தடுப்பு படைக்கு மல்லிகார்ஜுன கார்கே ஆதரவு!

பெங்களூரு: கர்நாடகத்தில் ஊழல் தடுப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா கூறுவதை நம்பித்தான் ஆக வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஊழல் தடுப்புப் படை அமைக்கப்பட்டுள்ளதற்கு, அம்மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்த்தன பூஜாரி ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ''15 மாநிலங்களில் ஊழல் தடுப்புப் படை உள்ளது; அங்கெல்லாம் அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், கர்நாடகத்தில் மட்டும் ஊழல் தடுப்புப் படைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது சரியல்ல

ஊழல் தடுப்புப் படையால் லோக் ஆயுக்தவின் செயல்பாடுகள் பாதிக்காது என்றும், அதன் அதிகாரம் முடக்கப்படாது எனவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருக்கிறார். அதனால், இந்த விஷயத்தில் அவர் கூறுவதை நம்பித்தான் ஆக வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close