Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி: ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கண்டனம்!

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹரிஷ் ராவத் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். 70 உறுப்பினர்கள் கொண்ட அம்மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 உறுப்பினர்களும், பா.ஜ.க.வுக்கு 28 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும், முற்போக்கு ஜனநாயக முன்னணியை சேர்ந்த 6 உறுப்பினர்களும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 9 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால், முதல்வர் ஹரிஷ் ராவத் நாளை (திங்கட்கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் கே.கே.பால் உத்தரவிட்டார்.

இதனிடையே ஆட்சியை தக்கவைக்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஹரிஷ் ராவத் ஈடுபடுவதாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தை காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ., ஒருவர் நேற்று வெளியிட்டார். இதையறிந்த பா.ஜ.க.வினர், முதல்வர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதால் அவர் அந்த பதவியில் இருக்கும் தகுதியை இழந்து விட்டார் என குற்றம்சாட்டினர்.

மேலும், மாநில அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் உடனடியாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் உத்தரகாண்ட் கவர்னர் மாநில அரசின் தற்போதைய நிலை குறித்து அனுப்பிய அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இன்று அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் அரசு சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த நிலையில், புதிய திருப்பமாக அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் அறிக்கையை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதுதொடர்பாக, இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ''இது ஜனநாயகப் படுகொலையாகும். ஜனநாயக அமைப்பின் மீது பா.ஜ.க.,வுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே மத்திய அரசின் இந்த முடிவு சுட்டிக் காட்டுகிறது" என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதேபோல், கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான அம்பிகா சோனி, ''இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. உத்தரகாண்ட் விவகாரத்தில் ஒவ்வொரு படிநிலையிலும் அரசியலமைப்பு சட்டத்தின் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது.

சிறிய மாநிலங்களில் நடைபெற்றுவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஜனநாயகத்துக்கு புறம்பாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாகவும் கவிழ்ப்பதே மத்திய அரசின் உண்மையான நோக்கமாக உள்ளது. முதலமைச்சர் ஹரீஷ் ராவத்துக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், நாளை (திங்கட்கிழமை) அவர் சட்டசபையில் தனது ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டியை நிரூபித்திருப்பார்" என தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ