Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காங்.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியை தோற்கடியுங்கள்: ஆவேசப்படும் மம்தா பானர்ஜி!

கொல்கத்தா:  வருகின்ற தேர்தலில், காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியை தோற்கடியுங்கள் என்று தனது பிரசாரத்தின்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.

மேற்குவங்க சட்டசபைக்கு வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி மே மாதம் 5-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 294 உறுப்பினர்களை கொண்ட மேற்குவங்க சட்டசபைக்கு, இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

ஆனால், கேரள மாநில சட்டசபை தேர்தலில் இந்த 2 கட்சிகளும் எதிர் எதிராக போட்டியிடுகின்றன. இந்த முரண்பாடுகளை தனது பிரசாரத்தில் சுட்டிக்காட்டி, புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசும்போது, ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒரு பொருத்தம் இல்லாத கூட்டணி.

முந்தைய இடதுசாரி ஆட்சியில் மாநிலத்தில் வன்முறை அதிகமாகி, மக்கள் பீதியுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் எங்கள் ஆட்சி வந்த பின்னர் தான் அமைதியும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் அவர்களுக்கு ஒரு ஓட்டுகூட கிடைக்காமல் தோற்கடியுங்கள். எந்த கொள்கையும் இல்லாத இந்த கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜ.க. அரசியல் ரீதியாக என்னுடன் மோத வேண்டும். அதை விட்டுவிட்டு எனது கட்சியின் மீது அவதூறு பரப்பக்கூடாது" என்று ஆவேசமாக பேசினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close