Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்க நகை மீதான வரியை ரத்து செய்ய முடியாது: அருண் ஜெட்லி திட்டவட்டம்!

புதுடெல்லி: தங்க நகை மீதான வரியை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்க நகை விற்பனைக்கு 1% கலால் வரியை விதித்துள்ளது மத்திய அரசு. இதனை அடுத்து தங்க நகைக் கடை உரிமையாளர்கள் கடந்த 3-ம் தேதி முதல் கடை அடைப்பு செய்தனர்.

இந்த போராட்டத்தால், அந்த துறைக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டது. மேலும்,  'நகைக்கடை உரிமையாளர்களை, கலால் வரித்துறையினர் துன்புறுத்த மாட்டர்' என, மத்திய அரசு உறுதியளித்ததை அடுத்து, இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தங்க நகை மீதான ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்ய முடியாது. சாமானியர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதே வரி போடும்போது, தங்கம் போன்ற ஆடம்பர பொருட்கள் மீது வரி போடாமல் இருக்க முடியாது.

சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும்போது, அதில் தங்க, வைர நகைகளும் சேர்க்கப்பட்டு, ஒரு சதவீத கலால் வரியும் இணைக்கப்பட்டு விடும். அதே சமயத்தில், நகை வியாபாரிகளுக்கு தேவையற்ற நடைமுறை தொந்தரவுகள் இல்லாமல், வரிவிதிப்பை எளிமைப்படுத்த தயாராக இருக்கிறோம்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close