Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூரு வாசிகளை கதிகலங்க வைத்த சங்கிலி தொடர் விபத்து! (பதற வைக்கும் வீடியோ)

பெங்களூருவில் இரண்டு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் மீது மோதிய கார் வீட்டிற்குள் புகுந்தது. இந்த சங்கிலி தொடர் விபத்தில் தையல் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். விபத்துக்கு காரணமான டாக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு ஜெயநகர் மாதவன் பூங்கா அருகே நேற்று பிற்பகலில் கார் ஒன்று சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது. இதில் இரண்டு கார்கள் சாலையில் இருந்த வீட்டின் சுவரில் மோதி நின்றது.



 

இருப்பினும், தறிகெட்டு ஓடிய கார், சாலையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோரம் இருந்த வீட்டின் சுவரை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்து நின்றது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிய தையல் தொழிலாளி ரிஸ்வான் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய மனைவி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் விபத்தை ஏற்படுத்திய பனசங்கரியை சேர்ந்த கார் ஓட்டுநர் டாக்டர் சங்கர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ