Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எரிபொருள் வாகனங்களுக்கு குட்பை சொல்கிறது இந்தியா!

னிமேல் வாகனங்களுக்கு பெட்ரோலிய எரிவாயுக்கள் தேவையில்லையா..? என்பது யாரும் பதில் கூற முடியாத கேள்வியாகவே இருக்கும். அதற்கான பதில் இதோ...

இந்தியாவை நூறு சதவிகித மின்சார வாகனங்கள் நிறைந்த நாடாக உருவாக்க அரசு முனைந்து வருகிறது. ஜீரோ டவுண் பேமண்ட் முறையில் மின்சார வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

'சிஐஐ யங் இந்தியா' நடத்திய ஒரு நிகழ்ச்சியில் மத்திய மின்சாரத்துறை மந்திரி பியூஸ் கோயல், “100% மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதில் உலகின் முதல் நாடாக இந்தியா உயரும். அதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள், நிதிகள் ஒதுக்கப்பட்டு தொடங்கப்படும்.

இதற்காக மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவ்டேகர் ஆகியோர் கொண்ட ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டு, 2030ல் க்குள் நாட்டினை 100 சதவிகித மின்சார வாகனங்கள் நிறைந்த நாடாக உருவாக்கப்படுவதற்கான ஆலோசனைகள் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து தொடங்கப்படும்” என்றார்.

மக்களிடம் இத்திட்டத்தைக் கொண்டு சேர்க்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கோயல், ' பெட்ரோலிய எரிபொருள் உபயோகிக்கும் வாகனங்களை விட குறைந்த விலை, ஜீரோ டவுண் பேமண்ட், எல்.இ.டி. விளக்குகள் போன்றவை இத்திட்டத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன. இதனால் நிச்சயமாக மக்களால் தங்கள் பட்ஜெட்டிற்கு எவ்வித பாதிப்பும் இன்றி மின்சார வாகனங்களை சரியான விலையில் வாங்கிப் பயன்படுத்தமுடியும்.

இந்த வாகனங்களில் பொருத்துவதற்கு எல்.இ.டி. விளக்குகள் அதிகமாகத் தேவைப்படுவதால் அதிக உற்பத்தி செய்யப்படும். இதன்மூலம் இவ்வகையான விளக்குகளின் பொது நிர்ணய விலையும் 64.41 ரூபாய்க்கு குறைவாக விற்கப்படும். பிப்ரவரி 2014ல் இதன் விலை 310 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மின் கட்டணங்களில் பெரிதாக செலவு ஏற்படாது. ஏனெனில் அது ஒவ்வொரு தனி நபரும் மின்சாரச் சிக்கனத்தைக் கடைபிடிப்பதில் இருக்கிறது” என்றார்.

- மு.ஜெயராஜ்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ