Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறை செல்ல தயாராக இருங்கள்... வீரபத்ர சிங்கை எச்சரிக்கும் பா.ஜ.க.!

புதுடெல்லி: எந்த நேரத்திலும் சிறையில் அடைக்கப்படுவோம் என்பதை முதல்வர் வீரபத்ர சிங் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா எச்சரித்து உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் டெல்லி உள்ள அவருக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்தை அமலாக்கத் துறை கடந்த வாரம் முடக்கியது.

மேலும், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி, தனது தலைமையிலான அரசை கவிழ்க்க சதி செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து வீரபத்ர சிங் புகார் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், இது குறித்து பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கருத்து தெரிவிக்கையில், ''சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்குச் சொந்தமாக டெல்லியில் உள்ள சொத்தை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. அதனால், அவர் மீது காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளது

மேலும், சிறைக்குச் செல்லாமல் தவிர்க்க அவர் முயற்சி செய்து வருகிறார். அதனால், பா.ஜ.க. மீது அடிப்படை ஆதாரமற்ற புகார்களை கூறி, அதன் மூலம் மலிவான அனுதாபத்தைப் பெற அவர் முயற்சிக்கிறார்.

எந்த நேரத்திலும் சிறையில் அடைக்கப்படுவோம் என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வீரபத்ர சிங்கிற்கு எதிரான வழக்கு விசாரணை, பா.ஜ.க. ஆட்சியில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close