Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேற்கு வங்க வளர்ச்சிக்காக பா.ஜ.க. அரசு எதையுமே செய்யவில்லை: குற்றஞ்சாட்டும் மம்தா!

புரூலியா: மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, புரூலியா நகரில் நேற்று திரிணாமூல் காங்கிரஸ் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, ''மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சி செய்த இடதுசாரிகள், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையுமே செய்யவில்லை. இதேபோல், மத்தியில் இரண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும் மேற்கு வங்க வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை.

இடதுசாரிகளின் ஆட்சிக்காலத்தில், வனங்கள் நிறைந்த ஜங்கள்மஹல் பகுதியில் ஒவ்வொரு நாளும் கொலை நடந்தது. அப்பகுதியே ரத்தக்காடாக காட்சியளித்ததால் பொதுமக்களிடம் பீதி நிலவியது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து ஜங்கள்மஹல் பகுதியில் அமைதி நிலவுகிறது. இடதுசாரிகளின் ஆட்சியில் இல்லாத அளவுக்கு மாநிலத்தின் வளர்ச்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் புதிய சரித்திரம் படைத்து இருக்கிறது" என்றார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close