Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மாடியோவ்... ஒரு நாய் குட்டியின் விலை ஒரு கோடி ரூபாயாம்!

பெங்களூரு: தொழிலதிபர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் விலை என இரண்டு வெளிநாட்டு நாய் குட்டிகளை வாங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

பெங்களூரு பனசங்கரியில் வசித்து வருபவர் சதீஷ். இவர், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். சதீஷ், நாய்கள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், சீனாவின் பீஜிங் நகரில் இருந்து கொரியன் 'தோசா மஸ்தீப்' என்னும் 2 மாத குட்டி நாய்கள் இரண்டை, ஒவ்வொன்றுக்கும் ஒரு கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

அந்த நாய் குட்டிகள், கார்கோ விமானம் மூலம் சீனாவில் இருந்து டெல்லி வழியாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பெங்களூரு வந்து இறங்கிய அந்த குட்டி நாய்களை சதீஷ் ஆர்வமுடன் வரவேற்று கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.

அப்போது, அந்த நாய் குட்டியில் ஒன்றின் உடல்நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை அவர் கவனித்துள்ளார். இதை தொடர்ந்து சதீஷ், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அந்த நாய் குட்டியை உடனே கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

மருத்துவர் அந்த நாய் குட்டிக்கு சிகிச்சை அளிக்க அது குணமடைந்துள்ளது. தற்போது தொழிலதிபர் சதீஷின் பிரமாண்டமான வீட்டின் புல்வெளியில் அந்த இரண்டு நாய் குட்டிகளும் மகிழ்ச்சியோடு விளையாடி கொண்டிருக்கிறது. மேலும், இந்த நாய் குட்டிகள் கொழு கொழுவென காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நாய்க் குட்டிகள், குளிர் பிரதேசங்களில் வளர கூடியது என்பதால் இதற்கென சிறப்பு வசிப்பிடத்தை ஏற்படுத்தி கொடுக்க சதீஷ் முடிவு செய்துள்ளார். இவ்வளவு விலை உயர்ந்த இந்த நாய் குட்டிகளை பார்த்து படம் பிடிக்க வியப்போடு நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து செய்தியாளர்கள் சதீஷ் வீட்டிற்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். 


 தொழில்அதிபர் சதீஷ் 2 நாய்க்குட்டிகளை ரூ.1 கோடிக்கு வாங்கிய சம்பவம் கர்நாடக மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கொடுத்து வைச்ச குட்டிங்க  தான் போங்க!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close