Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கௌசல்யாவுக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் தகவல்!

புதுடெல்லி: உடுமலை ஆணவக் கொலையில் பலியான சங்கரின் மனைவி கௌசல்யாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா டெல்லியில் நேற்று(செவ்வாய்) பேட்டி அளித்தார்.

அப்போது, " உடுமலைப்பேட்டையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டது, அவரது மனைவி கவுசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஆகியவை குறித்த விரிவான அறிக்கை திருப்பூரில் இருந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு கிடைத்துள்ளது. இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது.

அண்மைக் காலங்களில் தமிழகத்தில் சாதி வெறியால் செய்யப்படும் ஆணவக் கொலைகள், காதல் விவகாரங்கள் தொடர்பான குற்றங்கள் ஆகியவை குறித்து அதிக அளவில் புகார்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் கொலையுண்ட சங்கரின் மனைவிக்கு மருத்துவ உதவிகள் மற்றும் குடும்பத்தினருக்கு நிதியுதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், கொலையுண்ட சங்கர் மனைவி கௌசல்யாவுக்கு அரசு வேலை வழங்குவதற்கான பரிந்துரையை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஏற்கெனவே அனுப்பி உள்ளது"என்று தெரிவித்துள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ