Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மம்தா மீண்டும் ஆட்சியை பிடிப்பார்: கருத்து கணிப்பால் தொண்டர்கள் உற்சாகம்!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளதால், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு வருகின்ற ஏப்ரல் 4–ம் தேதி தொடங்கி,  மே மாதம் வரை 6 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ்–இடதுசாரிகள் கூட்டணி இடையே மும் முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

முதல் கட்ட தேர்தல் நெருங்கி விட்டதால், மேற்கு வங்கத்தில் தற்போது உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், மேற்கு வங்க மாநில மக்களின் ஆதரவு மம்தா பானர்ஜிக்கு இருப்பது கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஏ.பி.பி.–நீயூஸ்–நீல்சன் நிறுவனம், இந்த மாதம் 8–ம் தேதி முதல் 20–ம் தேதி வரை 118 தொகுதிகளில் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 295 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கு 178 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இடது சாரிகள்–காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 110 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், பா.ஜ.க.வுக்கு ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி கிடைக்கும் என்றும் இந்த கருத்து கணிப்பில்  தெரிய வந்துள்ளது. மேலும், பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தலில் 5 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும், ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு ஓட்டு சதவீதம் கணிசமாக உயரும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே எடுக்கப்பட்ட 2 கருத்து கணிப்புகள், மம்தா பானர்ஜி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்று கூறிய நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்து கணிப்பும் இதையே உறுதி செய்துள்ளதால், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்