Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.4 ஆயிரம் கோடியை செப்டம்பருக்குள் திருப்பி செலுத்துவேன்: விஜய் மல்லையா உறுதி!

புதுடெல்லி: இந்திய வங்கிகளிடம் நான் பெற்றுள்ள கடனில், ரூ.4 ஆயிரம் கோடியை வருகின்ற செப்டம்பர் மாதத்துக்குள் திருப்பி செலுத்தி விடுவேன் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.

இந்திய வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் உள்ளார் கிங் ஃபிஷர் நிறுவனரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா. விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் அதிரவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, விஜய் மல்லையா தற்போது எங்கே இருக்கிறார் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். உடனே, விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் வைத்தியநாதன், நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''வங்கிகளிடம் பெற்றுள்ள கடனில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 4 ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப செலுத்தி விடுகிறேன். மேலும், ஜி.இ. நிறுவனத்துக்கு எதிராக நான் தொடர்ந்துள்ள வழக்கில் வெற்றி பெற்றால் மேலும் ரூ.2 ஆயிரம் கோடியையும் செப்டம்பருக்குள் செலுத்தத் தயார்" என்று  விஜய் மல்லையா உறுதி அளித்து குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, இந்த கோரிக்கை குறித்து வங்கிகளின் தொழில் கூட்டமைப்பு இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close