Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொத்துக்குவிப்பு வழக்கு; கர்நாடக நீதிமன்ற தீர்ப்பு தவறானது: சு.சுவாமி கடும் வாதம்!

புதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வாதம் செய்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட நால்வரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. இதேபோல், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான இறுதி வாதங்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆச்சாரியா நேற்று ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தபோது, ''தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-96) இருந்த காலகட்டத்தில் மொத்தம் 146 சொத்துகளை வாங்கி உள்ளார். மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரில் 32 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்களின் பெயர்களில் 52 புதிய வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றின் வாயிலாக சுமார் ரூ.14 கோடி அளவுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் பல்வேறு வருவாய்களை மறைமுகமாக மேற்கொண்டுள்ளதை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல், தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால், இத்தீர்ப்பை ரத்து செய்து, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டு தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.

அவரைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர காரணமாக இருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தபோது, ''தமிழக முதல்வராக இருந்து கொண்டு, அரசின் சொத்தை வாங்கியவர் ஜெயலலிதா. அதன்பின் உச்ச நீதிமன்றத் தலையீட்டுக்குப் பின் அதைத் திரும்ப ஒப்படைத்தார்.

இந்த விவகாரம் மூலம் ஜெயலலிதாவின் செயல்பாட்டை அறிந்து கொள்ளலாம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் நானும், கர்நாடக அரசும் தாக்கல் செய்த பதில் மனுக்களை ஆராயாமல், கர்நாடக உயர் நீதிமன்றம் தவறான தீர்ப்பை அளித்தது. அதனால் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.

இருவரின் வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பின் வாதத்தை இன்று (மார்ச் 31) தொடருமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ