Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பா.ஜ.க.வால் அசாமுக்கு மிகப்பெரும் ஆபத்து உள்ளது என்கிறார் ராகுல் காந்தி!

கவுகாத்தி: வளர்ச்சியை பற்றி பேசும் பா.ஜ.க., எங்கெல்லாம் ஆட்சிக்கு வந்துள்ளதோ, அங்கு மக்களுக்கிடையே சண்டையை உருவாக்குகிறது. அந்தவகையில் பா.ஜ.க.வால் அசாமுக்கு மிகப்பெரும் ஆபத்து உள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். திக்போய் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ''பல்வேறு இனம், மதம் மற்றும் கலாசாரங்களை கொண்ட அசாம் மாநிலம் ஒரு குட்டி இந்தியாவை போன்றது. இங்கு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையே காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாடு முழுவதும் தங்கள் சொந்த சித்தாந்தங்களை பரப்பி இத்தகைய வேற்றுமையை சீர்குலைக்கின்றன.

அசாமில் அமைதியை மீண்டும் கொண்டு வந்தது காங்கிரசின் மிகப்பெரும் சாதனை. இது எங்களின் மதிப்பீடு அல்ல. மக்களுடன் நான் நடத்தும் வழக்கமான கலந்துரையாடலின் போது, அவர்கள் கூறியதன் மூலம் அறிந்து கொண்டதுதான் இவை. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தியதற்கான பலனை காங்கிரசுக்கு மக்கள் அளித்துள்ளனர்.

வளர்ச்சியை பற்றி பேசும் பா.ஜ.க., எங்கெல்லாம் ஆட்சிக்கு வந்துள்ளதோ, அங்கு மக்களுக்கிடையே சண்டையை உருவாக்குகிறது. அந்தவகையில் பா.ஜ.க.வால் அசாமுக்கு மிகப்பெரும் ஆபத்து உள்ளது. அந்த கட்சி இங்கு ஆட்சிக்கு வந்தால், இங்குள்ள நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படும். பா.ஜ.க.–அசாம் கணபரிஷத் கூட்டணி, அசாமை 15 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு கொண்டு சென்று விடும்.

அசாமில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், அனைத்து அரசுப்பணி காலியிடங்களும் நிரப்பப்படும். அனைத்து கோட்டங்களிலும் விவசாய நில வங்கி மற்றும் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியர்களின் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் வீதம் செலுத்தப்படும் என மோடி வாக்களித்தார். அப்படியானால் விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோர் இன்னும் வெளிநாடுகளில் இருப்பது ஏன்?

கருப்பு பணத்தை மீட்பது மட்டுமின்றி, இங்கு மோசடியில் ஈடுபட்டவர்களை நாட்டை விட்டு வெளியேறவும் மத்திய அரசு அனுமதித்து விட்டது. இந்தியாவில் தயாரிப்போம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் இந்த திட்டங்களின் கீழ் எந்தவொரு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை.

செல்வந்தர்கள், கோடீஸ்வரர்களுடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட ‘செல்ஃபி’ புகைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு ஏழையோ அல்லது ஒரு விவசாயியுடனோ அவர் இருப்பது போன்ற எந்த புகைப்படமும் வெளியானதில்லை. ஆனால் ஏழைகளின் முன்னேற்றம் தொடர்பாக அவருக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து அவரது பார்வையை ஏழைகள் பக்கம் திருப்ப தொடர்ந்து வலியுறுத்தும்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ