Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் கட்டட விபத்து: தமிழகத்தின் நிலை குறித்து அதிர்ச்சி புள்ளிவிவரங்கள்!

கொல்கத்தாவில் நேற்று மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்; 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த மேம்பால விபத்து.

இந்தியாவில் இதுபோன்ற கட்டட விபத்துகள் எவ்வளவு நடக்கின்றன என்று தேசிய குற்றப்பதிவு ஆணையம் தரும் தகவல்களை ஆராய்ந்தோம். அதன்படி பார்த்தால், கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நாளொன்றுக்கு சராசரியாக ஏழு கட்டட இடிபாடு விபத்துகள் இந்தியாவில் நடந்துள்ளன.

தமிழகத்தில் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை  1,380 பேர் கட்டட இடிபாடு விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். 2009 முதல் 2014 வரை இந்தியாவில், தமிழகத்தில் நடந்த கட்டட இடிபாடு விபத்துகளைப் பற்றிய முழு இன்டராக்டிவ் இன்ஃபோகிரஃபிக்ஸ் கீழே!

 

 
 - ர. ராஜா ராமமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ