Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் ஒரு இடம் பெயரும் பறவை: தருண் கோகாய்

மாஜுலி: அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக உள்ள சர்வானந்த சோனோவால் ஒரு இடம் பெயரும் பறவை என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் விமர்சித்து உள்ளார்.

அசாம் மாநிலத்தில் முதற்கட்டமாக மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 65 இடங்களுக்கு நாளை மறுதினம் (ஏப்ரல் 4-ம் தேதி) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் உள்ளிட்டோர் முதற்கட்ட தேர்தலில் பங்கேற்க உள்ளனர். பா.ஜ.க.,வின் சார்பில் முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சரான சர்வானந்த சோனோவால் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அசாமின், மாஜுலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், மாஜூலி தொகுதியில் நேற்று தருண் கோகாய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ''காங்கிரஸ் கட்சி கடந்த 2001-ம் ஆண்டில் அசாமில் ஆட்சிக்கு வந்தது முதல் மாஜுலி தொகுதிக்கு தலைவர் சோனியாகாந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரது வழிகாட்டுதலின் படி பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மஜூலி தொகுதியில் போட்டியிடும் சோனோவால் ஒரு இடம் விட்டு இடம் மாறும் பறவை. அவர் சமயத்திற்கு தகுந்தார் போல் இங்கும் அங்கும் மாறக்கூடியவர். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக லக்கிம்பூர் பகுதிக்கு மாறினார். பின்னர், அங்கிருந்து மீண்டும் மாஜுலி பகுதியிக்கு வந்துள்ளார். இது சோனோவாலின் அதிகார பசியை காட்டுகிறது" என்று கடுமையாக விமர்சித்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close