Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோயில்களுக்குள் பெண்கள் செல்வது அடிப்படை உரிமை: மும்பை நீதிமன்றம் அதிரடி!

மும்பை: சிங்கணாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் பெண்களை அனுமதியுங்கள் என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிங்கணாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நீலிமா வர்டாக், சமூக ஆர்வலர் வித்யா பால் ஆகியோர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், ''கோயில்களுக்குள் வழிபாடு நடத்துவதற்கு பெண்களுக்கு விதிக்கப்படும் தடையானது, குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானதாகும்; ஆகையால், 1956-ம் ஆண்டு மகாராஷ்டிர ஹிந்து மத வழிபாட்டுத்தல சட்டத்தை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' கோரி இருந்தனர்.

இந்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா, நீதிபதி எம்.எஸ்.சோனாக் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''கோயில்களுக்குள் வழிபாடு நடத்துவதற்காக உள்ளே செல்வது, பெண்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையாகும். இந்த அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இதனை உறுதிப்படுத்தும் 1956-ம் ஆண்டு மகாராஷ்டிர ஹிந்து மத வழிபாட்டு இட சட்டப் பிரிவுகளை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மகாராஷ்டிர அரசு எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

அப்போது மகாராஷ்டிர அரசு தரப்பில், ''மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அந்தச் சட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்'' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவை பெண்கள் நல ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close