Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரள லாட்டரியால் லட்சாதிபதியான ஆந்திர பிச்சைக்காரர்!

அனந்தப்பூர்: ஆந்திர மாநில பிச்சைக்காரருக்கு கேரள லாட்டரியில் ரூ.65 லட்சம் பரிசு விழுந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பொன்னையா (வயது 35). கல் குவாரியில் பணிபுரிந்து வந்த பொன்னையா, அங்கு தவறி விழுந்ததில் அவர் தனது கால்களை இழக்க நேர்ந்தது. மாற்றுத்திறனாளியான பொன்னையா, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஊர் ஊராக சென்று பல இடங்களில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் பொன்னையா, கடந்த 30-ம் தேதி கேரள மாநிலம் பனச்சமூடு பகுதியில் பிச்சை எடுக்கும்போது, அந்த பகுதியில் இருந்த ஒரு கடையில், 30 ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரிச் சீட்டை வாங்கி இருக்கிறார். இந்த லாட்டரிச் சீட்டுக்கு ரூபாய் 65 லட்சம் பரிசு விழுந்திருக்கிறது.

இதை தொடர்ந்து, அந்த லாட்டரி சீட்டை விற்றவர்கள், பிச்சைக்காரர் பொன்னையாவை பல இடங்களில் தேடிக் கண்டு பிடிந்து பரிசு தொகையை வழங்க முற்பட்டிருக்கின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது பொன்னையாவுக்கு வங்கிக் கணக்கு இல்லாதது. இதையடுத்து, பொன்னையாவின் உறவினர் ஒருவரின் வங்கிக் கணக்கில் அந்த பரிசு பணத்தை அதிகாரிகள் செலுத்தி அதை பொன்னையாவிடம் அளிக்கும்படி கூறி இருக்கின்றனர்.

பிச்சைக்காரர் லட்சாதிபதியான சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ