Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19-ம், டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலை இரு முறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் மாற்றத்துக்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19-ம், டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பின் பெட்ரோல் விலை சென்னை ரூ.61.32, டெல்லி ரூ.61.87, மும்பை ரூ.67.96 மற்றும் கொல்கத்தாவில் ரூ.65.48 கசுகளாக உள்ளது. இதேபோல் டீசல் விலை ஒரு லிட்டர் சென்னை ரூ.50.09, டெல்லி ரூ.49.31, மும்பை ரூ.56.09 மற்றும் கொல்கத்தாவில் ரூ.51.58 காசுகளாக உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக   எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. இதனால் சென்னையில் மீண்டும் பெட்ரோல் விலை 61 ரூபாயை தாண்டியுள்ளது, டீசல் விலை மீண்டும் 50 ரூபாயை எட்டியுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வாகன ஓட்டிகள், இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ