Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சட்டம் இல்லாவிட்டால்... 'பாரத் மாதா கீ ஜே'யை எதிர்ப்பாளர்களின் தலைகள் உருண்டிருக்கும்!'

ரோத்தக்: சட்டம் இல்லாவிட்டால், பாரத் மாதா கீ ஜே கோஷத்தை எதிர்ப்பவர்களின் தலைகளை வெட்டுவதற்கான வல்லமை நம்மிடம் உள்ளது என்று ஆவேசமாக யோகக் கலை குரு பாபா ராம்தேவ் கூறி உள்ளார்.

ஹரியாணா மாநிலம், ரோத்தக் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நல்லிணக்க மாநாட்டில் யோக குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசும்போது, ''பாரத் மாதா கீ ஜே என கோஷமிடுவது நாடு மற்றும் தாய்மண்ணின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் செயலாகும். இது மதம் சார்ந்ததல்ல. எந்த மதமாவது அந்த கோஷத்தை எழுப்புவதற்குத் தடை விதித்தால் அது தேச நலனுக்கு எதிரானது.

அந்த கோஷத்தை எழுப்புவதால் ஒரு குறிப்பிட்ட மதத்தை நாம் பின்பற்றுகிறோம் என்று அர்த்தம் அல்ல. அது தேசத்தின் கெளரவம், பெருமிதம் தொடர்பான விஷயம். நாம் பிறப்பால் ஹிந்துக்களாகவோ, முஸ்லிம்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, சீக்கியர்களாகவோ இருக்கலாம்; ஆனால் முதலில் நாம் இந்தியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது

'என் கழுத்தில் கத்தியை வைத்து பாரத் மாதா கீ ஜே என கோஷமிடுமாறு கூறினாலும் நான் அந்த கோஷத்தை எழுப்ப மாட்டேன்' என்று தலையில் தொப்பி அணிந்த ஒருவர் (அசாதுதீன் ஒவைஸி) சமீபத்தில் கூறியிருந்தார். நாட்டில் சட்டத்தின் ஆட்சி உள்ளது. இல்லாவிட்டால், பாரத் மாதா கீ ஜே கோஷத்தை எதிர்ப்பவர் யாராயினும், ஒன்றல்ல, ஆயிரமல்ல, லட்சம் தலைகளை வெட்டுவதற்கான வல்லமை நம்மிடம் உள்ளது" என்றார் ஆவேசமாக.

பாபா ராம்தேவின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close