Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவிலேயே அதிகவேக ரயில் சேவை தொடக்கம்! (வீடியோ)

 

டெல்லி- ஆக்ரா இடையேயான அதிவேக கதிமன் விரைவு ரயில்சேவையை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று  தொடங்கி வைத்தார். சதாப்தியை மிஞ்சும் வகையில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் இந்த  கதிமன் ரயில் இயக்கப்படுகிறது.

இந்தியாவில் அதிவேக ரயிலாக இதுவரை சதாப்தி எக்பிரஸ் விரைவு ரயில் இருந்து வருகிறது. இதனை மிஞ்சும் வகையில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகம் செல்லும் கதிமன் ரயில் முழுவதுமாக இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் குறிப்பாக  டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமையை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களில் இருமார்க்கமாகவும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் சேவை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். முதல் ரயில் இன்று காலை டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து ஆக்ராவிற்கு புறப்பட்டது. வார நாட்களில் காலை 8.10 மணிக்கு நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் ஆக்ராவை காலை 9.50 மணிக்கு சென்றடையும்.

அதேபோன்று ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு டெல்லி வந்தடையும். இந்த ரயிலில் பயணிகளுக்கு இலவச வைபை வசதி, உயர்தர சிற்றுண்டி வசதி, உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.


சதாப்தி விரைவு ரயில் மணிக்கு 91 கி.மீட்டர் வேகத்திலும், ராஜ்தானி மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கதிமன் விரைவு ரயில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

இதே போன்ற அதிவேக ரயில், டெல்லி மட்டுமின்றி வேறு சில மார்க்கங்களிலும் விரைவில் இயக்க ரயில்வே துறைதிட்டமிட்டுள்ளது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close