Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீகாரில் இன்று முதல் முழு மதுவிலக்கு...'மக்கள் முதல்வர்' நிதிஷ்க்கு குவியும் பாராட்டு!

பாட்னா: பீகாரில் இன்று முதல் முழுமதுவிலக்கு அமலுக்கு வருவதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

"மதுவினால்தான் குழந்தைகளின் கல்வியும், எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது. மதுவினால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மதுவிலக்கினை அமல்படுத்துவோம். " என பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தவர் நிதிஷ் குமார்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி, சொன்னபடி கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி, தனது அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தினைக் கூட்டி, மதுவிலக்கு தொடர்பான அமைச்சரவை முடிவை வெளியிட்டது. 2016   ஏப்ரல் 1-ம் தேதி முதல் முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்நாட்டு மதுபானங்களின் விற்பனையும், அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் கட்டமாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையும் தடைசெய்யப்படும் என அறிவித்திருந்தார் நிதிஷ்.

நிதிஷ் குமார் அறிவித்த தேர்தல் வாக்குறுதிபடி, பீகார் மாநிலத்தில்  முதற்கட்ட மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதாவது முதல்கட்டமாக உள்நாட்டு மதுபானங்களின் விற்பனைக்கு கடந்த 1-ம் தேதியன்று தடை விதிக்கப்பட்டது.

ஒரேகட்டத்தில் மதுவை தடைசெய்யமுடியாது என்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆறு மாதங்களுக்கு,  பீகார் மாநிலத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மட்டும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, மாநிலம் முழுக்க பூரண மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்பட்டுவிடும் என்று நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். பீகாரில் பெண்கள் மத்தியில் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிட்டியது. 

ஆனால் அரசியல் ஆச்சர்யமாக முழுமதுவிலக்கு  அடுத்த 6 மாதத்திற்கு பின் அமல்படுத்தப்படும் என்று கூறிய முதல்வர் நிதிஷ்குமார், பொதுமக்களின் வரவேற்பைக் கண்டு அடுத்த 6 மாதம் வரை காத்திருக்கவில்லை. இன்று முதலே பீகாரில் முழு மதுவிலக்கு அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

இனி பீகாரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு முழுத் தடை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுவிலக்கு இன்று முதலே அமலுக்கு வருவதாகவும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குஜராத், மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்கள் அதிகாரப்பூர்வ மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளன. தற்போது இந்த மாநிலங்களின் பட்டியலில், பீகாரும் இடம்பெறுகிறது. 

குறிப்பாக பீகார் மாநிலத்தில் மதுவிலக்கினை அமல்படுத்துவதால் அரசுக்கு, ஆண்டுதோறும் ஐந்தாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இந்த இழப்பினை எத்தனால் வாகன எரிபொருள் உற்பத்தியில் ஈடுசெய்ய பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.

நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தபோது, இது சாத்தியமே இல்லை எனக் கூறிய எதிர்கட்சியினர், இப்போது நிதிஷ்குமாரை எதிர்த்து அரசியல் செய்வதில் குழப்பமடைந்துள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ