Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திரிணமூல் காங்கிரஸ் அங்கீகாரத்தை ரத்து செய்ய சொல்கிறது காங்கிரஸ்!

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மாஃபியா ஒருவரிடம் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பணம் வாங்குவதாக ரகசிய விடியோ வெளியாது இதையடுத்து, அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் சட்ட ஆலோசனைப் பிரிவு செயலர் கே.சி.மித்தல், தேர்தல் ஆணையத்துக்கு எழுதி உள்ள கடிதத்தில், ''கொல்கத்தாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேம்பாலம் இடிந்து விழுந்ததின் பின்னணியில் மாஃபியா ஒருவர் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்குத் தேவையான பணத்தில் பெரும்பகுதி மாஃபியாக்களிடம் இருந்துதான் வருகின்றன. அதனால், ரகசிய விடியோக்களின் அடிப்படையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ