Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நூறு ரூபாய்க்காக வாழ்க்கையை முடித்துக் கொண்ட வாலிபர்!

 

நூறு ரூபாயைத் தொலைத்த வேதனை தாங்காமல் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

கிழக்கு டெல்லியின் கல்யான் புரியைச் சேர்ந்தவர் சிவம். 18 வயதான இவர், நிரந்தர வேலை ஏதும் இல்லாததால் அந்தப் பகுதியில் சிறு, சிறு வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சிவம் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பகுதியில் நேற்றிரவு நடந்த திருமண விருந்தில் பணியாற்றிய சிவத்துக்கு சம்பளமாக ரூ.300 கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் நூறு ரூபாயை அவர் தொலைத்துவிட்டதாகவும், அந்த ரூபாய் நோட்டை பல மணி நேரம் தேடியும் கிடைக்காத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ