Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு:சித்தூரில் பதட்டம் நீடிப்பு

திருப்பதி: ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது.நீதிமன்ற வளாகத்தில் 'கார் பார்க்கிங்' பகுதியில் இன்று(வியாழன்) திடீரென்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.உயிரிழப்பு குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.   

 

சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா மற்றும் அவரின் கணவர் ஆகியோர் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.இதில் அவர்களின் உறவினர்களே ஈடுபட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்தது.இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சித்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இன்று காலை இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது, கார் பார்க்கிங் பகுதியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.பதட்டமான நிலையில் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த குண்டுவெடிப்பில்  3 பேருக்கு  படுகாயம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது ஆந்திராவில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close