Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ள பாதிப்பின்போது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது... மத்திய குழு பாராட்டு!

புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக, நேரில் பார்வையிட்ட மத்திய அரசு குழு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகத்திற்கு அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்பி வைத்தது. அந்தக்குழு, நவம்பர் 26 மற்றும் 28-ம் தேதிகளிலும், ஜனவரி 4-ம் தேதியில் இருந்து 7-ம் தேதிவரையும் வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை பார்வையிட்டு மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மொத்தம் 72 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், கட்டடம், பாலங்கள் ஆகியவற்றின் சேதங்கள் குறித்த விவரங்களும், தற்காலிக புனரமைப்பு பணிகள் மற்றும் தற்காலிக புனரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு கோரிய நிதி மற்றும் மத்திய குழுவின் பரிந்துரை ஆகிய தகவல்கள் அடங்கியுள்ளன.

மேலும் அந்த அறிக்கையில், ''இதுபோன்ற பேரிடரின்போது தமிழக மக்களும், தமிழக அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் அனைத்து இடர்களையும் சமாளிக்கும் வகையில் மிகவும் திறமையான முறையில் செயல்பட்டனர். வெள்ளம் கடுமையாக பாதித்த பகுதிகளில் தமிழக அரசு தரப்பில் முகாம்கள் அமைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் உடை ஆகியவை வழங்கப்பட்டன. அவர்களுக்கு மாநில அரசு தங்களால் இயன்ற அனைத்து உதவுகளையும் திறம்பட செய்தது.

அந்தப் பகுதிகளில் குடிநீர் வசதி மிகவும் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய குழு பார்வையிட்ட பகுதிகள் அனைத்திலும் மக்களுடன் நேரடியான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது மக்கள் அனைவரும் மாநில அரசு உடனடியாக செயல்பட்டது குறித்து பொதுவாக தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். மாநில அரசும், குறிப்பாக சுகாதாரத்துறையும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் மிகவும் திறம்பட செயல்பட்டனர். பல இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

பாதுகாப்பான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல டன்கள் குவிந்திருந்த குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றுவதில் சென்னை மாநகராட்சி மிகவும் திறம்பட செயல்பட்டது. கிருமி நாசினிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close