Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பனாமா ஆவணம்: இந்தியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சொல்கிறார் பிரகாஷ் காரத்!

புதுடெல்லி: பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் வலியுறுத்தி உள்ளார்.

வரிச் சலுகைகள் வழங்கப்படும் வெளிநாடுகளில்,  ரகசிய சொத்துக்களை வாங்கியிருப்பதாக வெளியிடப்பட்டுள்ள பனாமா ஆவணங்களில் 500 இந்தியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உள்ளிட்ட அமைப்புகளின் நிபுணர்கள் அடங்கிய கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வார இதழான 'பீப்பிள்ஸ் டெமாக்ரசி'யில் பத்திரிகையில்,  அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எழுதி உள்ள கட்டுரையில், ''வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு,  மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை.

வரிச் சலுகைகள் வழங்கப்படும் வெளிநாடுகளில் ரகசிய சொத்துக்களை வாங்கியிருப்பதாக பனாமா ஆவணங்களில் 500 இந்தியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு முன்பும், வெளிநாடுகளில் ரகசிய வங்கிக் கணக்கு வைத்திருந்த இந்தியர்களின் பட்டியல் வெளியானது. எனினும், இந்த விவகாரங்களில் விசாரணைக் குழுக்களை அமைப்பதுடன் தனது நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திக் கொண்டு விட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. அரசுக்கு துணிச்சல் கிடையாது. தற்போது வெளியாகியுள்ள பனாமா ஆவணங்கள் தொடர்பாகவும் மோடி அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த மோடி அரசு உண்மையிலயே உறுதிபூண்டிருந்தால், பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ